கழிஞ்சூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா.
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த கழிஞ்சூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தினையொட்டி நடைபெற்ற அண்ணாபிஷேகம் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் கழிஞ்சூர் நாட்டாண்மை பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.