வேலூர் மாவட்டம், வேலூர் தொரப்பாடி பெரியல்லாபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் யஜூர் வேதா யோகா சென்டர் 1st annual celebration 2024 yoga noble World record நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வேலூர் தொரப்பாடி பெரியல்லாபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் யஜூர் வேதா யோகா சென்டர் 1st annual celebration 2024 yoga noble World record official attempt EkA HASTA MARICHAYASANA தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சி வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியின் முதல்வர் ரதி குமாரி தலைமையில் நடைபெற்றது.இதில் மாணவர்கள் கோப்பையில் உள்ள தண்ணீரை 180 நொடிகள் கைகளில் ஏந்தியவாறு யோகா செய்து சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் இந்து அறநிலையத்துறை இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் செயல் அலுவலர் சங்கர், வேலூர் வழக்கறிஞர் யாசர் முகமது, ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர் .இந்தியன் யோகாசனம் ஸ்போர்ட்ஸ் பெட்ரேஷன் (IYSF) , தலைமை நிர்வாக அதிகாரி எல்.அரவிந்த், முதன்மை இயக்குனர் அலுவலர் கே .கே. வினோத் , ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். உடன் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் முதன்மை தலைமை ஆசிரியர் சி. எம். சசிகுமார் தலைமை ஆசிரியர் நிஷ்கலா, தமிழ்நாடு யோகா டெக்கரேஷன் செயலாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ,பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது