அருள்மிகு ஸ்ரீ சக்திமலை குழந்தை பாலமுருகன் திருக்கோயிலில்ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா
அருள்மிகு ஸ்ரீ சக்திமலை குழந்தை பாலமுருகன் திருக்கோயிலில்
ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா நடைபெற்றது
இவ்விழாவில் மகா அபிஷேகமும், அகண்ட பாராயணமும்,
ஸ்ரீ சண்முக சகஸ்ர நாம அர்ச்சனையும்
மெய்யன்பர்கட்கு திருவமுது ஊட்டுதல்,சிவஞான மெய் பூசையும் இதனைதொடர்ந்துபொது அன்னம்பாலிப்பும் குருவருளால் நடைபெற்றது. இப்பெருவிழாவில் ஸ்ரீமந் அகத்தியர் மாமுனிவர் மகா குருபூஜை விழாவில் சிவ சிவ குழுவினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் அகத்திய மாமுனிவர் குருபூஜை விழா குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு மூன்றாவது முறையாக நடைபெறுவதுவும் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளதுவும் குறிப்பிடத்தக்கது இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் ,ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணைத்தலைவர் லோகலட்சுமி குமரன், ஆலய அர்ச்சகர் முருகன் சுவாமிகள், ஊர் பெரிய தனம், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர