வேலூர் மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற 35 ஆம் ஆண்டு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.டி.எம். சித்ரா மஹாலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் வேலூர் அரசு ரியல் எஸ்டேட் Rtnஞானசேகரன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள் தலைவர் எம். ரமேஷ், தமிழ்நாடு காதுகேளதோர் கூட்டமைப்பு சென்னை, பொன்னுசாமி பொதுச் செயலாளர் ,தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சென்னை சி. பிரிசிலா, தலைவர் இ. கே .ஜமால் அலி, தலைவர் சென்னை காது கேளாதோர் சங்கம் சைகைமொழி பெயர்ப்பாளர் ஆர். தேவிகாராணி மற்றும் சங்க ஆதரவாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ,சங்க ஆலோசகர் கே. ஆர். டெல்லி ,தலைவர் ஆர் .நரேஷ், அமைப்புச்செயலாளர் எம். சுரேஷ் குமார், பொருளாளர் பி. சுமதி ,துணை பொருளாளர் கே .கோபி ,மற்றும் வேலூர் மாவட்ட காது கேளாத முன்னேற்ற சங்கம் மாணவ ,மாணவி ,நிர்வாகிகள் வரவேற்பாளர்கள் ,விழாவில் கலந்து கொண்டனர் .இதில் காதுகேளாத பள்ளிக்கூடங்களில் சைகை மொழி சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் ,அரசு மாற்றுத்திறனாளி அலுவலகங்களில் வழங்கும் காது கருவிகள் தரமான துருப்பிடிக்காத நல்ல கருவிகளை வழங்க வேண்டும் என்றும் ,காக்ளியர் முறையில் காதுகளில் காது கருவி பொருத்தும் முறையை தடை செய்யு வேண்டும் எனவும் ,இந்த முறையில் மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதால் இதனை தடை விதிக்க வேண்டும் எனவும், அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு 1 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் ,மாதம் தோறும் உதவித் தொகையாக 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் ,மாதம் உதவித்தொகை 1500 ரூபாய் பெற்று வரும் காது கேளாத மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.