Posts

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 354 ஆவது ஆராதனை விழா.

Image
வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்ரீமத்வ விஜய நகரம் சேண்பக்கம் பிருந்தாவனத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும்  ஸ்ரீ ராகவேந்திர  ஸ்வாமிகளின் 354 ஆவது ஆராதனை விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஸர்வ சேவை, புஷ்ப அலங்காரம், ரதோத்ஸம், பஞ்சாமிர்த அபிஷேகம், கனகாபிஷேகம், பால் அபிஷேகம், மற்றும் சிறப்பு ஆராதனைகளும், பூஜைகளும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும்   நடைபெற்றது இதில் ஆலய விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் திரளானோர் கலந்து கொண்டு பிருந்தாவனத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருள்பளித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

அரியூர் காந்தி நகர் அருள்மிகு ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் நடைபெற்ற விஜயதசமி விழா.

Image
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகர், அரியூர் காந்தி நகரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவினை முன்னிட்டு உற்சவருக்கு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் ,தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஆலய ஸ்தாபகர்  பரத் மற்றும்   ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலய பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கெங்காநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டம்

வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், கெங்காநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டம் ஆயிரங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் என். செந்தில்குமார் தலைமையிலும், அரசு அலுவலர்கள் முன்னிலையிலும், நடைபெற்றது. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ,புது வாழ்வு திட்ட உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் டி .சேகர், மற்றும் ஊர் பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர் .