கெங்காநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டம்
வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், கெங்காநல்லூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டம் ஆயிரங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் என். செந்தில்குமார் தலைமையிலும், அரசு அலுவலர்கள் முன்னிலையிலும், நடைபெற்றது. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ,புது வாழ்வு திட்ட உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் டி .சேகர், மற்றும் ஊர் பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர் .