அரியூர் காந்தி நகர் அருள்மிகு ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் நடைபெற்ற விஜயதசமி விழா.
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகர், அரியூர் காந்தி நகரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவினை முன்னிட்டு உற்சவருக்கு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் ,தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஆலய ஸ்தாபகர் பரத் மற்றும் ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலய பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.