வேலூர் மாவட்டம் அரியூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஜீர்ணோர்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
வேலூர் மாவட்டம் , வேலூர் மாநகரம்,அரியூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஜீர்ணோர்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஸ்ரீபுரம் பொற்கோவிலை சிருஷ்டியித்த ஞான குரு ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் திருக்கரங்களால் நடைபெற்றது.. தலைமை நாட்டாண்மை சேகர் ,துணை நாட்டாண்மை உமாபதி, இணை நாட்டாண்மைதார்கள் பாண்டியன், பாக்கியநாதன், நிர்வாக எழுத்தர் முனிவேல் ,ஆகியோர் கும்பாபிஷேக விழாவினை தலைமை தாங்கினார். விழாவில் முன்னிலை திருவாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் , பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.