தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற ஆடி கிருத்திகை திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ,அர்ச்சனையும், தீபாராதனையும், சுவாமி திருவீதி உலாவும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு விருப்பாச்சிபுரம் ஸ்ரீ லட்சுமி கணபதி பைனான்ஸ் குழுமத்தினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் அருள் . நடராஜன் பிச்சாண்டி , வெங்கடேசன், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.