தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற ஆடி கிருத்திகை திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ,அர்ச்சனையும், தீபாராதனையும், சுவாமி திருவீதி உலாவும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆலய தலைமை குருக்கள் யுவராஜ் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.