பென்னத்தூர் மதுரா, அல்லிவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் ,கன்னியம்மன், ஆலயத்தில் நடைபெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா .
வேலூர் மாவட்டம் ,பென்னத்தூர் மதுரா, அல்லிவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் ,கன்னியம்மன், ஆலயத்தில் நடைபெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இரத்தினகிரி தவத்திரு .பாலமுருகனடிமை சுவாமிகள் ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மா ,கலவை சச்சிதானந்த சுவாமிகள், அப்பாஜி சுவாமிகள் ,ஆகியோர் அருள் ஆசியுடன் நடைபெற்றது இதில் ஆலய விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர் கும்பாபிஷேக விழாவில் கோ பூஜை, லட்சுமி பூஜை ,நவகிரக ஹோமம், கலசம் யாக பிரதிஷ்டை, விமான கோபுரத்திற்கு கலசபிஷேகமும், இதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது.