வேலூர் மாநகர் சித்தேரியில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதரர் ஆறு படை வீடு முருகப்பெருமான், ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ கால பைரவர், திருக்கோயில் நடைபெற்ற ஆடி கிருத்திகை ஐம்பெரும் திருவிழா
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரம் 59 வது வார்டு பெரிய சித்தேரியில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதரர் ஆறு படை வீடு முருகப்பெருமான், ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ கால பைரவர், திருக்கோயில் நடைபெற்ற ஆடி கிருத்திகை ஐம்பெரும் திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், கொடியேற்றுதல் ,மற்றும் காப்பு கட்டுதல் ,காவடி ஊர்வலமும், சுவாமி அலங்காரத்துடன் வானவேடிக்கைகளுடனும் திருவீதி உலாவும், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், திருவிளக்கு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் ஆலய விழா குழுவினர்கள், வீரபத்திரன் அதிமுக அல்லாபுரம் மேற்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் மாயக்கண்ணன், மூர்த்தி ,தம்பு, சாந்தலிங்கம், அரிகிருஷ்ணன் ,கார்த்தி ,மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் திரளானோர் கலந்து கொண்டனர்.