வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, சேனுர் கிராமத்தில் அர்ஜூன் மார்ஷியல் ஆர்ஸ்ட் சார்பாக கோடைகால சிலம்பம் யோகா, கராத்தே , ஜூடோ, பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, சேனுர் கிராமத்தில் அர்ஜூன் மார்ஷியல் ஆர்ஸ்ட் சார்பாக கோடைகால சிலம்பம் யோகா, கராத்தே , ஜூடோ, பயிற்சி முகாம் 29.04.2023 முதல் 27.05.2023 வரை நடைபெற்றது. இப் பயிற்சி முகாமில் 50 மாணவ ,மாணவியர்கள் ,கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் . பயிற்சியாளர்கள் இரா. அறிவொளி , ஏ .பிரபாகரன் , ஆர். யுவராஜ் ,சி.ஜே .சக்திவேல், பி. முரளி, ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியினை அளித்தனர். பயிற்சியின் நிறைவு விழா அர்ஜுன் மார்ஷியல் ஆர்ஸ்ட் தலைவர் த.இராகுலன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்திய குழந்தைகள் நலச்சங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் .தனராஜ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சான்றிதழ்களை வழங்கினார் .இந்நிகழ்ச்சியினை எஸ். தமீனா தொகுத்து வழங்கினார். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ,கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றனர் .