வேலூர் மாவட்டம் ,வேலூர் டார்லிங் ரெசிடென்சியில் உலக நீரிழிவு நோய் தினம் (2022-2023) நிறைவு விழாவினையொட்டி பாராட்டு நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும், நீரிழிவு நோய் மற்றும் இதயம் பற்றின விழிப்புணர்வு நிகழ்ச்சியும்,,நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் ,வேலூர் டார்லிங் ரெசிடென்சியில் உலக நீரிழிவு நோய் தினம் (2022-2023) நிறைவு விழாவினையொட்டி பாராட்டு நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும், நீரிழிவு நோய் மற்றும் இதயம் பற்றின விழிப்புணர்வு நிகழ்ச்சியும்,,நடைபெற்றது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் , கலந்துகொண்டு நீரிழிவு நோய் மற்றும் இதயம் பற்றின விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார் .உலகம் முழுவதும் பரவி வரும் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் குறித்து பொதுமக்களிடையே கவனத்தை ஈர்க்கும் வகையில் நீரிழிவு நோய் மற்றும் இதயமும் என்னும் தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நடன பயிற்சி நடத்தினர். ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து அதை சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றின விழிப்புணர்வு உரையாற்றினர்.. இதில் நீரிழிவு நோய் மருத்துவர்கள், ஆலோசகர்கள் ,செவிலியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ்  மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்..

Popular posts from this blog

காட்பாடியில் ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் சார்பில் 1ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

அருள்மிகு ஸ்ரீ சக்திமலை குழந்தை பாலமுருகன் திருக்கோயிலில்ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா

வேலூர் அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட்டில் இரத்த தான முகாம்